Home அவசியம் படிக்க வேண்டியவை சிலாங்கூரில் 10 ஏடிஎம்களில் மோசடி கும்பல் கைவரிசை -1.7 மில்லியன் திருட்டு!

சிலாங்கூரில் 10 ஏடிஎம்களில் மோசடி கும்பல் கைவரிசை -1.7 மில்லியன் திருட்டு!

603
0
SHARE
Ad

atm bankபெட்டாலிங் ஜெயா, செப்டம்பர் 30 – சிலாங்கூர் மாநிலத்தில் 10 தானியங்கி பணப்பரிமாற்று நிலையங்களில் (ஏடிஎம்) நடந்த மோசடி வேலையில் (hacking incidents)-ல் இதுவரை மொத்தம் 1,736,710 ரிங்கிட் திருடப்பட்டுள்ளதாக சிலாங்கூர் காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் 6 அல் ராஜ்ஜி வங்கி கிளைகள், இரண்டு அஃபின் வங்கிக் கிளைகள் மற்றும் இஸ்லாம் வங்கிக் கிளைகள் என மொத்தம் 10 பணப்பரிமாற்று நிலையங்களில் நடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இரண்டு சம்பவங்கள் குறித்து கடந்த ஞாயிற்றுக்கிழமையும், 8 சம்பவங்கள் குறித்து திங்கட்கிழமையும் காவல்துறைக்கு புகார்கள் கிடைத்துள்ளன.

#TamilSchoolmychoice

இதுவரை 7 நிலையங்களில் களவு போன தொகை மொத்தம் 1,736,710 ரிங்கிட் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. மற்ற மூன்று நிலையங்களின் இழப்பு குறித்து இன்னும் அறிவிக்கப்படவில்லை.