பெங்களூர், செப்டம்பர் 30 – சொத்துக் குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும், நீதிமன்றம் பிறப்பித்த தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமின் வழங்க கோரியும், குற்றவாளி என அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு தடை கோரியும், பெங்களூரு உயர் நீதிமன்றத்தில் நேற்று தனித்தனியே மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த இடைக்கால மனுக்கள், இன்று விடுமுறை கால நீதிமன்றத்தில் நீதிபதி ரத்னகலா முன் விசாரணைக்கு வருகிறது. ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் சார்பிலும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஜெத்மலானி, மும்பையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் அமித் தேசாய், பெங்களூருவைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஒருவர், தமிழகத்தைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர்கள் பி.குமார், நவநீத கிருஷ்ணன் ஆஜராகின்றனர்.