Home நாடு ஊழல் புகார் தொடர்பில் சபா அம்னோ பிரமுகர் கைது – ஊழல் தடுப்பு ஆணையம் தகவல்

ஊழல் புகார் தொடர்பில் சபா அம்னோ பிரமுகர் கைது – ஊழல் தடுப்பு ஆணையம் தகவல்

691
0
SHARE
Ad

UMNOகோலாலம்பூர், அக்டோபர் 1 – சபாவைச் சேர்ந்த அம்னோ அரசியல் பிரமுகர் ஒருவர் ஊழல் தொடர்பான விசாரணையின் பொருட்டு தடுத்து வைக்கப்பட்டது உண்மைதான் என மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் தெரிவித்தது.

அரசு நிலத்திற்கு வழங்கப்பட்ட இழப்பீடு தொடர்பான முறைகேடு குறித்து அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது என்று ஊழல் தடுப்பு ஆணையத்தின் விசாரணை இயக்குநர் டத்தோ முகமட் ஜாமிதான் கூறினார்.

“வெள்ளிக்கிழமை தனது வாக்குமூலத்தை வழங்குவதற்காக அவர் ஊழல் தடுப்பு ஆணைய தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டார். அவ்வாறு வந்தபோதே அவர் கைது செய்யப்பட்டார்,” என்றார் முகமட் ஜாமிதான்.

#TamilSchoolmychoice

முன்னதாக அந்த அரசியல் பிரமுகர் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக மாறுபட்ட தகவல் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

“நில இழப்பீடு தொடர்பான முறைகேடு குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். அவரது வாக்குமூலம் பதிவு செய்யப்பட்ட பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்,” என்று முகமட் ஜாமிதான் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

போலீசாரால் தடுத்து வைக்கப்பட்ட அந்த அரசியல் பிரமுகர் சபாவில் உள்ள 25 அம்னோ தொகுதித் தலைவர்களில் ஒருவராவார்.

300 மில்லியன் ரிங்கிட் ஊழல் புகாரில் அவர் சிக்கியுள்ளார்.