Home அவசியம் படிக்க வேண்டியவை “சிலாங்கூரை இனி அம்னோ கைப்பற்ற முடியாது” – மகாதீர் விமர்சனம்

“சிலாங்கூரை இனி அம்னோ கைப்பற்ற முடியாது” – மகாதீர் விமர்சனம்

563
0
SHARE
Ad

Tun Mahathirகோலாலம்பூர், அக்டோபர் 3 – சிலாங்கூர் மாநிலத்தில் மீண்டும் அம்னோ ஆதிக்கம் செலுத்துவதோ, மீண்டும் தேர்தலில் கைப்பற்றும் காலமோ வெகு தூரத்தில் இருப்பதாக முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சிலாங்கூர் மந்திரி பெசார் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளிடையே பிளவு ஏற்பட்டபோது, அதை பயன்படுத்திக் கொள்ள அம்னோ தவறிவிட்டதாகவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அண்மையில் சிலாங்கூர் மந்திரி பெசார் பதவி தொடர்பாக பக்காத்தான் கூட்டணியைச் சேர்ந்த பிகேஆர், பாஸ் மற்றும் ஐசெக இடையே நிலவிய அரசியல் ரீதியிலான குழப்பத்தை சுட்டிக்காட்டி அவர் தமது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

#TamilSchoolmychoice

“அம்னோவின் அரசியல் எதிரிகள் மத்தியில் சிலாங்கூர் மந்திரி பெசார் பதவி தொடர்பில் சிக்கல் மூண்டது. இதை அம்னோ சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது வருத்தம் அளிக்கிறது. அம்னோ மிகவும் பலவீனமாகவும், மீண்டும் சிலாங்கூரில் ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு மீண்டு வர முடியாத நிலையிலும் காணப்படுகிறது. முன்பு சிலாங்கூர் நமது (அம்னோ) கட்டுப்பாட்டில் இருந்தது. இப்போது மற்றவர்கள் (பக்காத்தான்) பிரிந்துள்ள நிலையிலும் நமக்கு அதற்கான வாய்ப்பே இல்லை என்பது போல் உள்ளது. அம்னோவுக்கு என்ன ஆனது?” என மகாதீர் கேள்வி எழுப்பியுள்ளார்.