Home நாடு எம்எச்17: மேலும் 5 மலேசியர்களின் நல்லுடல்கள் கொண்டு வரப்பட்டன!

எம்எச்17: மேலும் 5 மலேசியர்களின் நல்லுடல்கள் கொண்டு வரப்பட்டன!

569
0
SHARE
Ad

சிப்பாங், அக்டோபர் 3 – எம்எச்17 விமானப் பேரிடரில் பலியானவர்களில் 5 மலேசியர்களின் நல்லுடல்கள் ஆம்ஸ்டெர்டாமில் இருந்து கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்திற்கு இன்று காலை 8.30 மணியளவில் கொண்டுவரப்பட்டது.

மேத்திவ் இலக்கியல் சிவஞானம், லியூ யாவ் சீ மற்றும் அவரது மனைவி லீ கியா யீன், மெய்லிங் முவாலா மற்றும் முகமட் அஃப்ருஸ் தம்பி ஆகிய அந்த 5 பயணிகளில் நல்லுடல்களுக்கு இராணுவ மரியாதையுடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இந்த 5 பயணிகளில் மேத்திவ், மெய்லிங், முகமட் ஆகிய 3 பேரின் நல்லுடல்கள் சவப்பெட்டியிலும், தம்பதிகள் அஸ்தியும் கொண்டு வரப்பட்டன.

#TamilSchoolmychoice

கடந்த ஜூலை 17 -ம் தேதி, ஆஸ்டெர்டாமில் இருந்து கோலாலம்பூர் வந்து கொண்டிருந்த எம்எச்17 விமானம் கிழக்கு உக்ரைன் அருகே கிளர்ச்சியாளர்களால் ஏவுகணைத் தாக்குதல் நடத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.