Home நாடு மாஸ் மறுசீரமைப்புப் பணிகளுக்கு புதிய அதிகாரிகள் நியமனம்!

மாஸ் மறுசீரமைப்புப் பணிகளுக்கு புதிய அதிகாரிகள் நியமனம்!

513
0
SHARE
Ad

MAS LOGOகோலாலம்பூர், அக்டோபர் 4 – இரு பெரும் பேரிடர்களுக்குப் பிறகு கடும் நெருக்கடியில் இருக்கும் மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனம், மறுசீரமைப்புப் பணிகளை துரிதமாக செயல்படுத்தி வருகின்றது.

இதற்காக அந்நிறுவனம், முகமத் நஸ்ருதீன் முகமத் பஸ்ரி என்பவரை ‘தலைமை மறுசீரமைப்பு அதிகாரி’ (CRO)-யாகவும்,  முகமத் சுக்ரி ஹுசைன் என்பவரை ‘தலைமை நிதி அதிகாரி’ (CFO)-யாகவும் நேற்று நியமனம் செய்துள்ளது.

நாட்டின் முன்னணி விமான போக்குவரத்து நிறுவனமான மலேசியன் ஏர்லைன்ஸின் எம்எச் 370 விமானம், கடந்த மார்ச் மாதம் 8-ம் தேதி வானில் பறந்து கொண்டிருக்கையில் மாயமானது. இதில் பயணம் செய்த 239 பயணிகள் பற்றி எந்தவொரு தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.

#TamilSchoolmychoice

இந்த பெரும் துயர் நீங்குவதற்கு முன்பாக கடந்த ஜூலை மாதம் 17-ம் தேதி, 298 பயணிகளுடன் சென்ற எம்எச் 17 விமானம் உக்ரைனில், ஆயுதப் போராளிகளால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்த இரு பெரும் பேரிடர்களும் மாஸ் நிறுவனத்தை கடும் நெருக்கடிக்கு உள்ளாக்கின.

இந்த நிகழ்வுகளில் இருந்து மாஸ் நிறுவனம் மீண்டு வர முடியாது என்று அனைவரும் கூறிவந்த நிலையில், மாஸ் நிறுவனம் தனது மறுசீரமைப்பு பணிகளை துரிதமான முறையில் செய்து வருகின்றது.

இதன் காரணமாக முகமத் நஸ்ருதீன் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள தலைமை நிர்வாக அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன் அவர் கஸானா எனப்படும் தேசிய முதலீட்டு கழகத்தின் நிதி அதிகாரியாக பொறுப்பு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோன்று நிதி நிலைகளை கையாள, மாஸில் 28 வருட பணி அனுபவமுள்ள  முகமத் சுக்ரி ஹுசைன், தலைமை நிதி அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக மாஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதிய பணி நியமனங்கள், மாஸ் நிறுவனத்தை மறுசீரமைக்கும்” என்று கூறியுள்ளது.