சென்னை, அக்டோபர் 4 – ஜெயலலிதாவின் வாழ்க்கை கதை ஐந்து மொழிகளில் திரைப்படமாக உருவாகவிருக்கிறதாம். படத்துக்குத் தலைப்பு அம்மா என வைத்துள்ளாராம் இயக்குநர்.
இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்தில் வெளியாகப் போகிறதாம். ஒரு இளம்பெண் எப்படி சினிமாவுக்குள் நுழைந்து உச்ச நட்சத்திரமாக ஜொலிக்கிறார். அதற்குப் பிறகு எப்படி அரசியலில் அடியெடுத்து வைக்கிறார்.
அதற்குப் பிறகு என்ன ஆகிறார் என்பதுதான் படத்தின் கதையாம். அப்படியே ஜெயலலிதாவின் வாழ்க்கையைப் படமாக்குகிறார்கள்.இந்தப் படத்தை இயக்குபவர் பைசல் சயீப்பாம். இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் ராகினி திவேதி நடிக்கிறார்.
ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றது வரை அனைத்தையும் காட்சிப்படுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.