Home நாடு ஹிஷாமுடினின் தாயார் துன் சுஹைலா காலமானார்!

ஹிஷாமுடினின் தாயார் துன் சுஹைலா காலமானார்!

509
0
SHARE
Ad

hishamudinபெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 4 – மலேசியாவின் மூன்றாவது பிரதமர் துன் ஹுசைன் ஆனின் மனைவியும், தற்காப்பு அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசைனின் தாயாருமான துன் சுஹைலா முகமட் நோ (வயது 82) இன்று அதிகாலை 12.30 மணியளவில், கேபிஜே டாமன்சாரா மருத்துவமனையில் காலமானார்.

இது குறித்து ஹிஷாமுடினின் அலுவலகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அன்னாரது நல்லுடல் எண் 19, ஜாலான் சங்காட் துங்கு, புக்கிட் துங்கு, கோலாலம்பூர் என்ற முகவரியில் வைக்கப்பட்டுள்ளது என்றும், காலை 9 மணி முதல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இன்று மதியம் அன்னாரது நல்லுடல் தேசிய மசூதிக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் சடங்குகள் செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

ஹிஷாமுடினின் டிவிட்டர் பக்கத்தில் இன்று காலை முதல் பல தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, அதற்கு பதிலளிக்கும் விதமாக, “வருத்தம் தெரிவித்த அனைவருக்கும் நன்றி. என் தாயார் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இயற்கை எய்தினார்” என்று ஹிஷாமுடின் குறிப்பிட்டுள்ளார்.