Home நாடு 7 வீரர்களும் பத்திரமாக மீட்பு! காணாமல் போன கடற்படை படகு கண்டுபிடிப்பு

7 வீரர்களும் பத்திரமாக மீட்பு! காணாமல் போன கடற்படை படகு கண்டுபிடிப்பு

983
0
SHARE
Ad

Tan Sri Abdul Aziz Jaafar Malaysia Navy Chiefகோலாலம்பூர், அக்டோபர் 7 – சபா அருகே ஞாயிற்றுக்கிழமை காணாமல் போன அரச மலேசிய கடற்படையின் படகு கண்டுபிடிக்கப்பட்டது. அதில் இருந்த 7 பேரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இத்தகவலை கடற்படைத் தலைவர் டான்ஸ்ரீ அப்துல் அசிஸ் ஜாஃபர் நேற்று திங்கட்கிழமை வெளியிட்டார்.

காணாமல் போன படகு தொடர்பாக தமது சமூக வலைதளப் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வந்து அவர், படகின் கமாண்டர் லெப்டினென்ட அஸ்ரி பாக்கர், ரேடியோ வழி தொடர்பு கொண்டு படகில் உள்ள 7 வீரர்களும் பத்திரமாக இருப்பதாக தகவல் அளித்ததை உறுதி செய்தார்.

#TamilSchoolmychoice

“சிபி204 என்ற அப்படகும் அதிலுள்ள சிப்பந்திகளும் பத்திரமாக அதே சமயம் மிகுந்த பசியுடன் இருப்பதாக கமாண்டர் அஸ்ரி தெரிவித்தார்” என அப்துல் அசிஸ் ஜாஃபர் தமது டுவிட்டர் பக்கத்தில் திங்கட்கிழமை மாலை 6.10 மணிக்கு குறிப்பிட்டார்.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை காலை கோத்தகினபாலுவில் உள்ள கடற்படை தளத்தில் இருந்து புறப்பட்ட அப்படகு அன்று காலை 11.15 மணியளவில் தனது வானொலி தொலைத் தொடர்பை இழந்ததாக அன்றிரவு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அப்துல் அசிஸ் ஜாஃபர் தெரிவித்திருந்தார்.

சபாவில் உள்ள லாயாங் லாயாங் தீவில் உள்ள அரச மலேசிய கடற்படை தளம் நோக்கி சென்றது சிபி 204 படகு என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அத்தீவில் இருந்து சுமார் கடல் மைல் தொலைவில் படகு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.