Home இந்தியா பிணை இல்லை: அதிர்ச்சியில் மயக்கம் அடைந்தாரா ஜெயலலிதா?

பிணை இல்லை: அதிர்ச்சியில் மயக்கம் அடைந்தாரா ஜெயலலிதா?

433
0
SHARE
Ad

Jayalalitha_AFP2பெங்களூரு, அக்டோபர்  7 – கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் தனது பிணை மனு நிராகரிக்கப்பட்டதாக தகவல் வெளியானதும் ஜெயலலிதா அதிர்ச்சியில் மயக்கம் அடைந்ததாக தமிழக ஊடகங்களில் உறுதிப் படுத்தப்படாத செய்தி வெளியாகி உள்ளது.

சிறையில் ஜெயலலிதா உள்ள அறையில் அவருக்கு தொலைக்காட்சி வசதி உள்ளது. இதன்
வழி அவர் நேற்று கன்னட அலைவரிசைகளில் ஒளிபரப்பான செய்திகளை கவனித்து
வந்தார்.

அவருடன் ஒரே அறையில் தங்கியுள்ளதாகக் கூறப்படும் சசிகலா மற்றும் இளவரசியும் செய்திகளை கவனித்ததாகத் தெரிகிறது.

#TamilSchoolmychoice

இந்நிலையில் தனது பிணை மனுவை நீதிபதி மீண்டும் நிராகரித்ததாகத்  தொலைக் காட்சியில் செய்தியைக் கண்ட ஜெயலலிதாவின் ரத்தக் கொதிப்பு அதிகரித்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அவர் உட்கார்ந்த நிலையிலேயே லேசான மயக்க நிலைக்குச்
சென்றதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த சிறை மருத்துவர்கள் விரைந்து வந்து ஜெயலலிதாவுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர்.

அதன் பின்னர் அவர் இயல்பு நிலைக்கு திரும்பியதாகவும், தேவைப்பட்டால் அவர் வெளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் பெங்களூரு சிறைச்சாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.