டெல்லி, அக்டோபர் 9 – விரைவில் இந்தியா பாகிஸ்தான் எல்லை மோதல் முடிவுக்கு வரும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய விமானப்படையின் ஆண்டு விழாவை முன்னிட்டு டெல்லியில் விமானப்படை தளபதி அரூப் ராஹா அளித்த விருந்து நிகழ்ச்சியில் மோடி கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மோடி இந்த தகவலை தெரிவித்துள்ளார். முன்னதாக காஸியாபாத்தில் இந்திய விமானப்படையின் 82-வது ஆண்டு விழா நடைப்பெற்றது இதில் பங்கேற்ற விமானப்படை தளபதி அரூப் ராஹா அண்டை நாடுகள் உடன் இந்தியா நல்லுறவை விரும்புவதாக தெரிவித்தார்.
எல்லையில் நிலவும் சூழல் குறித்து முப்படை தளபதிகளுடன் மோடி ஆலோசனை நடத்தினார். அப்போது உள்துறை செயலாளர் அணில் கோஸ்சுவாமி தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் உடன் இருந்தனர்.
இதனிடையே கடந்த 8 நாட்களாக எல்லையில் தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது. இதில் 15 பாகிஸ்தான் நாட்டினர் கொல்லப்பட்டனர்.
40 பேர் வரை காயம் அடைந்துள்ளதாக இந்திய பாதுகாப்பு படை இயக்குனர் டி.கே. பதக் இதனை உறுதி செய்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி கூறியதாவது;
“விரைவில் இந்தியா பாகிஸ்தான் எல்லை மோதல் முடிவுக்கு வரும். மக்களின் நலன் பாதுகாக்கப்படும். இது குறித்து பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம் என மோடி கூறினார்.