கோலாலம்பூர், அக்டோபர் 11 – தொழில்நுட்பம் மனிதனை முழுவதுமாக சோம்பல் செய்துவிட்டது என ஒரு சாரார் குறை கூறிக் கொண்டிருக்கும் நிலையில், சிறு சிறு பணிகளையும் தானியங்கியாகவே செய்து கொள்ளும் வகையில் புதிய புதிய செயலிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக திறன்பேசிகளுக்கான பயனுள்ள செயலிகள் நாளுக்கு நாள் கணக்கிடமுடியாத அளவில் பெருகிக் கொண்டே இருக்கின்றன.
அந்த வகையில், தற்போது ‘கூகுள் ப்ளே ஸ்டார்’ (Google Play Store)-ல் அறிமுகமாகி உள்ள புதிய செயலி, நமது சட்டைப் பைகளில் இருந்து திறன்பேசிகளை வெளியே எடுக்கும் பொழுதே தானாக திரை விலகிக் கொள்வதற்கும், பின்னர் சட்டைப் பைகளில் திறன்பேசிகளை வைக்கும் பொழுது தானாகவே திரையை பூட்டிக் கொள்ளவதற்கும் பயன்படுகின்றது. இதன் மூலம் நாம் ஒவ்வொருமுறையும் சட்டைப் பைகளில் இருந்து திறன்பேசிகளை வெளியே எடுக்கும் பொழுது, திரை நீக்கம் செய்யும் தொடு தேர்வை அழுத்தத் தேவையில்லை.
‘பாக்கெட் லாக்’ (Pocket Lock) என பெயரிடப்பட்டுள்ள இந்த செயலி ‘கூகுள் ப்ளே ஸ்டாரில் இலவசமாக பதிவிறக்கம் செய்யத் தக்க வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய செயலியின் மூலம், மற்ற செயலிகளையும் தேவைக்குத் தகுந்தார் போல் திரை முடக்கம் செய்ய இயலும்.