Home இந்தியா ஆந்திராவில் ‘ஹூட் ஹூட்’ புயல் கரையைக் கடந்தது – 5 பேர் பலி!

ஆந்திராவில் ‘ஹூட் ஹூட்’ புயல் கரையைக் கடந்தது – 5 பேர் பலி!

666
0
SHARE
Ad

HudHud Cycloneவிசாகப்பட்டிணம், அக்டோபர் 12 – ஆந்திர மாநிலம் விசாகப்பட்டிணம் அருகே ஹூட் ஹூட் என்ற அதிதீவிர புயல் இன்று கரையைக் கடந்தது.

மணிக்கு 180 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த புயல் காற்று வீசியது. ஆந்திரமாநிலத்தில் விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம், கோதாவரி, விஜயநகரம் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் மழைப்பொழிவு இருந்தது.

அதிவேக காற்றினால் பல மரங்கள் வேரோடு சாய்ந்தன. 5 பேர் உயிரிழந்ததாக முதல் கட்ட தகவல் தெரிவிக்கிறது. இன்னும் முழுச்சேதம் குறித்த தகவல் கிடைக்கப் பெறவில்லை.

#TamilSchoolmychoice

புயல் எச்சரிக்கை காரணமாக கடலோர மாவட்ட மக்கள் சுமார் 8 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். இதனால் பெரும் உயிர்ச்சதேசம் தவிர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.