Home இந்தியா சிறையில் ஜெயலலிதா அறைக்கு குளிர்சாதன வசதியா?

சிறையில் ஜெயலலிதா அறைக்கு குளிர்சாதன வசதியா?

534
0
SHARE
Ad

bangalurபெங்களூர், அக்டோபர் 14 – பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள ஜெயலலிதா அறைக்கு  குளிர்சாதன பெட்டி பொருத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

சொத்து குவிப்பு வழக்கில்  தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த மாதம் 27-ம்  தேதி முதல் பெங்களூர் பரப்பனஅக்ரஹார சிறையில்  அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் இருக்கும் சிறை அறையில்’ கட்டில், மெத்தை,  தலையணை, போர்வைகள் உள்பட சில வசதிகள் இருந்தது.  ஆனால் தற்போது அவரது அறையில் குளிர்சாதன பெட்டி (ஏர்கூலர்) இருப்பதாக தகவல் வெளியாகியது. அதை  யாரும் உறுதிபடுத்தவில்லை.

#TamilSchoolmychoice

இந்நிலையில் பரப்பன அக்ரஹார சிறை உதவி பொறியாளர் ஜெயராமன் கொடுத்த தகவலின் பேரில் பெங்களூர் டானேரி சாலையில் உள்ள பிரபல  மின் பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் இருந்து  நேற்று குளிர்சாதன பெட்டி இயந்திரம் சிறைக்கு கொண்டு வரப்பட்டது.

அதிகாரிகளின் அனுமதியுடன் ஊழியர்கள் ஜெயலலிதா தங்கியுள்ள அறைக்கு குளிர்சாதன பெட்டியை பொருத்தும் பணியில் ஈடுபட்டதாக  கூறப்படுகிறது.

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி ஆகியோரை சிறை  வளாகத்தில் உள்ள மருத்துவமனையின் சிறப்பு அறையில் பேசிக் கொண்டிருந்தாக சிறை ஊழியர்கள் தெரிவித்தனர்.