Home நாடு “நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தவறு. விசாரணை இறுதிக் கட்டத்தில்” – மஇகா புகார் குறித்து சங்கத்...

“நடவடிக்கை எடுக்கவில்லை என்பது தவறு. விசாரணை இறுதிக் கட்டத்தில்” – மஇகா புகார் குறித்து சங்கத் துணைப் பதிவதிகாரி விளக்கம்

572
0
SHARE
Ad

MIC-Logo-Featureகோலாலம்பூர், அக்டோபர் 15 – மஇகா தேர்தல் முறைகேடுகள் மீதான புகார்கள் குறித்து நாளை பிரதமர் அலுவலகத்தில் மஇகா உறுப்பினர்களும், தலைவர்களும் ஆட்சேப மனு வழங்கவிருக்கும் சூழ்நிலையில் சங்கப் பதிவதிகாரியின் சார்பில் சங்கப் பதிவகத்தின் துணைத் தலைமை இயக்குநர் முதன் முறையாக வாய் திறந்து கருத்து தெரிவித்துள்ளார்.

சங்கப் பதிவகத்தின் துணைத்தலைமை இயக்குநர் முகமட் நோர்சாம் முஸ்தாபா, மஇகா உறுப்பினர்கள் செய்த புகார்கள் மீது நடவடிக்கை எதனையும் தாங்கள் எடுக்கவில்லை என்பது உண்மையில்லை என விளக்கம் கொடுத்துள்ளார்.

கடந்தாண்டு நடந்த மஇகா தேர்தலில் அதிகார துஷ்பிரயோகம், முறைகேடுகள் நிகழ்ந்ததாக வழங்கப்பட்ட புகார்கள் குறித்து தாங்கள் விசாரணை நடத்தி வந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“புகார்கள் கிடைக்கப் பெற்றவுடன் புலன் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது எங்களின் விசாரணைகளின் இறுதிக் கட்ட அறிக்கையை நிறைவு செய்யும் கட்டத்தில் இருக்கின்றோம்” என அவர் பெர்னாமா செய்தி நிறுவனத்திடம் இன்று கூறினார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற மஇகா கட்சித் தேர்தலில், புகார்களை சமர்ப்பித்திருக்கும் டி.மோகன் உள்ளிட்ட எட்டு பேர் உதவித் தலைவர் தேர்தலுக்கும், 23 மத்திய செயற்குழு பதவிகளுக்காக 88 வேட்பாளர்களும் போட்டியிட்டனர்.

போட்டியின் முடிவில் டத்தோ சோதிநாதன், டத்தோ சரவணன், டத்தோ பாலகிருஷ்ணன் ஆகிய மூவரும் உதவித் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர்.