Home உலகம் அருணாச்சல பிரதேசத்தில் இந்தியா சாலை அமைக்க சீனா கடும் எதிர்ப்பு!

அருணாச்சல பிரதேசத்தில் இந்தியா சாலை அமைக்க சீனா கடும் எதிர்ப்பு!

638
0
SHARE
Ad

Arunachala Pradesh Mapபெய்ஜிங், அக்டோபர் 16 – இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசத்தின் மக்மோகன் கோடு பகுதியில், சாலை அமைக்க இந்தியா முடிவு செய்திருப்பதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியா, சீனா இடையே நீண்டகால எல்லைப்பிரச்சினையாக இருந்து வரும அருணாசல பிரதேசம் தொடர்பாக, சுமூக தீர்வு காண, இரு நாடுகளும் இதுவரை 17 முறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளன. சமீபத்தில் இந்தியா வந்த சீன அதிபர் ஜின்பிங், எல்லைப்பிரச்சனை தொடர்பாக விரைவில் சுமூக தீர்வு காணப்படும் என்று தெரிவித்து இருந்தார்.

இநிலையில் அருணாசல பிரதேசத்தில் உள்ள மக்மோகன் கோடு பகுதியில், சாலை அமைக்க இந்தியா முடிவு செய்து இருந்தது. அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சீன வெளியுறவுத் துறை அமைச்சகம், இந்தியா-சீனா இடையே தற்போது உள்ள சுமூக நிலையை இது பாதிக்கும் என்று தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

இது தொடர்பாக சீன வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஹாங் லீவ் கூறுகையில், “சீனா மற்றும் இந்தியாவிற்கு இடையே, கிழக்கு பகுதியில் எல்லைப்பிரச்சினை நிலவுகின்றது. அதில் இறுதி தீர்வு காணப்படும்வரை, அந்தப் பகுதியில் இந்தியா எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காது என நம்புகிறேன். அப்படி எடுத்தால் அது தற்போதய சுமூக நிலையை மேலும் சிக்கலாக்கி விடும்” என்று கூறியுள்ளார்.