Home தொழில் நுட்பம் இன்று ஆப்பிள் புதிய கருவிகள் அறிமுக விழா!

இன்று ஆப்பிள் புதிய கருவிகள் அறிமுக விழா!

554
0
SHARE
Ad

apple-logo-blueகுப்பர்ட்டினோ, அக்டோபர் 16 – இன்று அமெரிக்க நேரப்படி இன்னும் ஏறத்தாழ ஒன்றரை மணி நேரத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய கருவிகள் அறிமுக  விழா குப்பர்ட்டினோ நகரில் உள்ள அதன் தலைமையகத்தில் நடைபெறவிருக்கின்றது.

ஐபோன் 6 கருவிகளின் அறிமுகத்தைத் தொடர்ந்து ஐபேட் 2, ரெட்டினா என்ற அம்சத்தோடு கூடிய திரையைக் கொண்ட ஐபேட் மினி 3, மேக் ஓஎஸ்எக்ஸ் ‘யோஸ்மைட்’ ஆகிய புதிய கருவிகள் இன்றைய நிகழ்ச்சியில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவற்றோடு ‘ஆப்பிள் பே’ எனப்படும் செல்பேசிகளின் வழி வாங்கும் பொருட்களுக்கான விலைக் கட்டணத்தைச் செலுத்தும் முறை குறித்த புதிய அம்சங்களும் வெளியிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

தொழில் நுட்ப வல்லுநர்களும், பயனர்களும் ஆர்வத்துடன் காத்திருக்கும் இந்த நிகழ்வு ஆப்பிள் நிறுவனத்தின் கீழ்க்காணும் இணையத் தள முகவரிகளில் நேரடியாக ஒளிபரப்பப்படும்.

http://appleinsider.com/

http://live.appleinsider.com/Event/Live_from_Apples_Its_been_way_too_long_iPad__Retina_iMac_event

இந்த புதிய கருவிகள் குறித்த சிறப்பு அம்சங்கள், அதன் விவரங்கள் செல்லியல் தகவல் ஊடகத்தில் உடனுக்குடன் வெளியிடப்படும்.