Home தொழில் நுட்பம் ஐபோன் விற்பனையில் சரித்திரம் காணாத சாதனை – டிம் குக் பெருமிதம்

ஐபோன் விற்பனையில் சரித்திரம் காணாத சாதனை – டிம் குக் பெருமிதம்

477
0
SHARE
Ad

iPhone 6 & iPhone 6+குப்பர்ட்டினோ, அக்டோபர் 17 – அமெரிக்க நேரப்படி அக்டோபர் 16ஆம் தேதி குப்பர்ட்டினோ நகரில் உள்ள தனது தலைமையகத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய கருவிகளையும், தொழில் நுட்பங்களையும் அறிமுகப்படுத்தி உரையாற்றும் நிகழ்வில், அந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி டிம் குக், இதுவரை இல்லாத அளவுக்கு ஐபோன்கள் விற்பனையில் சாதனை படைத்துள்ளதாக அறிவித்தார்.

குறிப்பாக எத்தனை எண்ணிக்கையில் ஐபோன்கள் விற்பனையாகின என்பதைக் குறிப்பிடாமல் பேசிய டிம் குக், கடந்த காலங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு முதல் மாதத்தில் விற்பனையான ஐபோன்களின் எண்ணிக்கையோடு ஒப்பிடும்போது, ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 பிளஸ் திறன்பேசிகள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாக விற்றுள்ளன எனத் தெரிவித்தார்.

உண்மையான விற்பனை எண்ணிக்கை நிலவரம், அடுத்த வாரம் ஆப்பிள் நிறுவனத்தின் அறிக்கை வெளியாகும் போது வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.