Home தொழில் நுட்பம் ‘ஆப்பிள் பே’ (Apple Pay) அக்டோபர் 20 முதல் தொடக்கம்

‘ஆப்பிள் பே’ (Apple Pay) அக்டோபர் 20 முதல் தொடக்கம்

574
0
SHARE
Ad

Apple Pay launchகுப்பர்ட்டினோ, அக்டோபர் 17 – இன்று ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி செய்த அறிவிப்பின்படி ஆப்பிள் பே எனப்படும் செல்பேசி வழி கட்டணம் செலுத்தும் முறை எதிர்வரும் அக்டோபர் 20ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கும்.

முதல் கட்டமாக இந்த நடைமுறை அமெரிக்காவில் செயல்படுத்தப்படும்.

கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது முதல் பல்வேறு வங்கிகளும், நிறுவனங்களும் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றன என்றும் டிம் குக் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

2015ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அறிமுகமாகவிருக்கும் ஐவாட்ச் எனப்படும் கைக்கெடிகாரங்கள் மூலமாகவும் ஆப்பிள் பே திட்டம் செயல்படுத்தப்படும்.