Home உலகம் பாம்பே ஜெயஸ்ரீக்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை!

பாம்பே ஜெயஸ்ரீக்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை!

692
0
SHARE
Ad

bombay-jeyaநியூ யார்க், பிப்.25-நடந்து முடிந்த ஆஸ்கர் விருது நிகழ்ச்சியில் புகழ்பெற்ற திரைப்பட பாடகி பாம்பெ ஜெயஸ்ரீக்கு விருது கிடைக்கவில்லை.

பையின் வரலாறு திரைப்படத்தில் பைக்கு தாலாட்டு என்ற தமிழ்மொழித் திரைப்பாடலுக்காக சிறந்த அசல் பாடல் வகையில் ஆஸ்கர் விருதுக்கு (அகாதமி)  முந்தெரிவு செய்யப்பட்டார். ஆனால், சில காரணங்களினால் பாம்பே ஜெயஸ்ரீக்கு ஆஸ்கர் விருது கிடைக்கவில்லை.

கடந்த முறை உலக புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு சிலாம்டாக் மில்லியனர் என்ற திரைப்படத்தில் சிறந்த இசைக்கான விருது கிடைத்ததனால், இம்முறை அனைவரும் பாம்பேஸ்ரீக்கு இவ்விருது கிடைக்கும் என்று எண்ணினர்.  ஆனால் எதோ காரணத்தினால் கிடைக்காமல் போனதால் ஏமாற்றமே மிஞ்சியது.

#TamilSchoolmychoice

பாம்பே ஜெயஸ்ரீ எனப் பரவலாக அறியப்படும் ஜெயஸ்ரீ இராம்நாத் ஒரு புகழ்பெற்ற கருநாடக இசைப்பாடகி. இவர் தென்னிந்தியத் திரைப்படங்களில் முன்னணி இசையமைப்பாளர்களான ஹாரிஸ் ஜெயராஜ், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான், வித்யாசாகர், யுவன் சங்கர் ராஜா இஅசையமைப்பில் பல வெற்றித் திரைப்பாடல்களைப் பாடியுள்ளார். இவர் வயலின் வாத்தியக்கலைஞர் லால்குடி ஜெயராமனின் சீடர் ஆவார்.