பெங்களூர், அக்டோபர் 18 – இன்று மாலைக்குள்ளாகவே ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரையும் சிறையில் இருந்து வெளியேவிட தேவையான நடவடிக்கைகளை எடுத்து விடுவேன் என்று தெரிவித்துள்ளார் சிறை அதிகாரி (டிஐஜி) ஜெயசிம்ஹா.
ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வருக்கும் உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ள நிலையில், அதை சிறப்பு நீதிமன்ற நீதிபதியிடம் சமர்ப்பித்துவிட்டு, அவர் அனுமதியின்பேரில் சிறை நிர்வாகம் நால்வரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பது விதிமுறை.
இதற்கு நாளை வரை கால அவகாசம் தேவைப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சிறைத்துறை அதிகாரி ஜெயசிம்ஹா நிருபர்களிடம் கூறுகையில், “விடுதலைக்கு தேவையான அனைத்து நடைமுறைகளும் இன்று மாலைக்குள் முடிந்துவிடும்” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே சிறைக்கு வெளியே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு அதிமுக தொண்டர்கள் குவிவது தடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக சிறையை சுற்றிலும் 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.