Home அவசியம் படிக்க வேண்டியவை சிலாங்கூர் – மத்திய அரசாங்கம் இடையிலான தண்ணீர் ஒப்பந்தம் தொடரும் – அஸ்மின் அலி உறுதி

சிலாங்கூர் – மத்திய அரசாங்கம் இடையிலான தண்ணீர் ஒப்பந்தம் தொடரும் – அஸ்மின் அலி உறுதி

602
0
SHARE
Ad

Azmin Aliஷா ஆலாம், அக்டோபர் 23 – சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் மத்திய அரசாங்கத்திற்கும், சிலாங்கூர் மாநில அரசாங்கத்திற்கும் இடையிலான தண்ணீர் பகிர்வு ஒப்பந்தத்தைத் தான் ரத்து செய்யப்போவதில்லை என சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி அறிவித்துள்ளார்.

சிலாங்கூர் மாநில மக்களுக்கு சிறந்த முறையில், தரமான தண்ணீர் விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதே தனது தலையாய நோக்கம் எனக் குறிப்பிட்ட அஸ்மின் அலி, அந்த ஒப்பந்தம் முழுமையாக அமுல்படுத்தப்பட்டு, நிறைவு செய்யப்பட வேண்டுமென தான் விரும்புவதாகவும் கூறியுள்ளார். “இதன் மூலம் எதிர்காலத்தில் மக்களுக்கு போதுமான தண்ணீர் விநியோகம் இருப்பதை உறுதி செய்வதே எனது நோக்கம்” என்றார் அவர்.

இருப்பினும் அந்த தண்ணீர் ஒப்பந்தம் மீதான முழுவிவரங்களையும் பகிரங்கப்படுத்தப்பட வேண்டுமென தான் புத்ரா ஜெயாவுக்கு நெருக்குதல் அளிக்கப் போவதாகவும் அஸ்மின் அலி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“அந்த தண்ணீர் ஒப்பந்தம் மற்றும் அதன் திட்டங்கள் மீதான நடைமுறைகள், கட்டுப்பாடுகள் என்ன, தண்ணீருக்கான கட்டணங்கள் என்ன, இவை எப்படி பயனர்களைப் பாதிக்கப் போகின்றன என்பது பற்றி எங்களின் புதிய மாநில அரசு நிர்வாகம் மக்களுக்கு விளக்கம் சொல்ல முடியாத நிலைமை ஏற்படுமானால், அந்த தண்ணீர் ஒப்பந்தத்தை எப்படி எங்களால் தற்காத்துப் பேச முடியும்?” என்றும் அஸ்மின் அலி கேள்வி எழுப்பினார்.