Home நாடு ஐநா பாதுகாப்பு மன்றத்திற்கு மலேசியா தேர்வு – நஜிப்பிற்கு மோடி வாழ்த்து!

ஐநா பாதுகாப்பு மன்றத்திற்கு மலேசியா தேர்வு – நஜிப்பிற்கு மோடி வாழ்த்து!

544
0
SHARE
Ad

Najib Modi Comboகோலாலம்பூர், அக்டோபர் 23 – ஐக்கிய நாட்டு (ஐ.நா.) பாதுகாப்பு மன்றத்தில் மலேசியா இடம் பிடித்தமைக்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, மலேசியப் பிரதமர் நஜிப்புக்குத் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக நஜிப்புக்கு அவர் வாழ்த்துச் செய்தி ஒன்றை அனுப்பி உள்ளார்.  ஐ.நா. பாதுகாப்பு மன்றத்தில் நிரந்தர உறுப்பினர்கள் அல்லாத பிரிவின் கீழ், 2015 – 2016 தவணைக்கான உறுப்பினராக மலேசியா தேர்வாகி உள்ளது.

இதற்கிடையே இரு பிரதமர்களுக்கும் இடையேயான தொலைபேசி உரையாடலில் 2 மாஸ் விமானங்களின் பேரிடர் சம்பவங்களுக்கு மோடி தனது இரங்கலைத் தெரிவித்திருந்தார்.

#TamilSchoolmychoice

“இவ்விரு பேரிடர் சம்பவங்கள் தொடர்பில் இந்திய அரசாங்கம் செய்த உதவிகளுக்கு பிரதமர் நஜிப் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்,” என்று இந்தியத் தூதரகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

“இரு பிரதமர்களும் மியான்மரில் நடைபெறவுள்ள கிழக்கு ஆசிய மாநாட்டில் கலந்து கொள்ளும் தருணத்தில் சந்தித்துப் பேச ஒப்புக்கொண்டுள்ளனர்” என்றும் அந்த செய்திக் குறிப்பு மேலும் தெரிவித்தது.

மலேசியாவுக்கும் ஆசியானுக்கும் வலுவான செழிப்பான இந்தியா மிக முக்கியம் என பிரதமர் மோடி கூறி உள்ளார். முன்னதாக மலேசியாவுக்கு வருகை தரும்படி பிரதமர் நஜிப் விடுத்துள்ள அழைப்பையும் அவர் ஏற்றுக் கொண்டுள்ளார்  என்று இந்திய தூதரக செய்திக் குறிப்பு மேலும் தெரிவிக்கிறது.

பதினைந்து ஆண்டுகால இடைவெளிக்குப் பின்னர் ஐ.நா. பாதுகாப்பு மன்றத்திற்கான ஆசிய பசிபிக் வட்டார உறுப்பு நாடாக திரும்பியுள்ளது மலேசியா.