Home இந்தியா “நான் நலமாக உள்ளேன்; வதந்திகளை நம்பாதீர்கள்” அப்துல் கலாம் அறிவிப்பு

“நான் நலமாக உள்ளேன்; வதந்திகளை நம்பாதீர்கள்” அப்துல் கலாம் அறிவிப்பு

602
0
SHARE
Ad

abdul-kalamபுதுடெல்லி, அக்டோபர்  24 –  தனது உடல்நிலை பாதிக்கப்பட்டதாக வெளியான தகவல்களை நம்ப வேண்டாம் என முன்னாள் இந்திய அதிபர் அப்துல் கலாம் கேட்டுக் கொண்டுள்ளார்.  அண்மையில் தனது 83ஆவது பிறந்தநாளைக் கொண்டாடிய அவர், பின்னர் வங்கதேசம் சென்றிருந்தார்.

இந்நிலையில் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் உள்ளதாகவும், அவரின் நிலைமை மோசமாகிக் கொண்டே இருப்பதாகவும் ஒரு தகவல் பரவியது.
குறிப்பாக சமூக வலைத் தளங்கள் வழி பலர் இத்தகவலைப் பரிமாறிக் கொண்டதால், குறுகிய இடைவெளியில் நாடு முழுவதும் இச்செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சூழ்நிலையில், தான் நலமாக இருப்பதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் கலாம்.

#TamilSchoolmychoice

“நான் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல் பரவியுள்ளது. இது முற்றிலும் பொய்யானது. வதந்திகளை நம்பாதீர்கள். அனைவருக்கும் என் தீபாவளி நல்வாழ்த்துக்கள்,” என்று தனது டுவிட்டர் பதிவில் கலாம் கூறியுள்ளார்.

கடந்த மே மாதமும் கலாமின் உடல்நிலை மோசமடைந்ததாக இதேபோல் வதந்தி பரவியது குறிப்பிடத்தக்கது.