Home அவசியம் படிக்க வேண்டியவை ஜோகூரில் 7 புதிய தமிழ்ப் பள்ளிகள் – டத்தோ எஸ். பாலகிருஷ்ணன் தகவல்

ஜோகூரில் 7 புதிய தமிழ்ப் பள்ளிகள் – டத்தோ எஸ். பாலகிருஷ்ணன் தகவல்

626
0
SHARE
Ad

Dato S.Balakrishnanஜோகூர்பாரு, அக்டோபர்  24 – நகர்ப்புறங்களில் அதிகரித்து வரும் தாய்மொழிக் கல்விக்கான தேவைக்கேற்ப ஜோகூரில் 7 புதிய தமிழ்ப் பள்ளிகள் அமைக்கப்படும் என அம்மாநில மஇகா தலைவர் டத்தோ எஸ்.பாலகிருஷ்ணன் (படம்) தெரிவித்தார்.

இப்பள்ளிகள் குறிப்பாக நகர்ப்புறங்களில் அமையும் என்றார் அவர். குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் அல்லது மாணவர்களே இல்லாத காரணத்தினால் தோட்டப்புறங்கள் மற்றும் கிராமப் பகுதிகளில் இயங்கி வந்த சில தமிழ்ப் பள்ளிகள், நகர்ப் புறங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

“7 புதிய பள்ளிகளுக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன. புக்கிட் இண்டா, தெப்ராவ், கூலாய் ஜெயா மற்றும் சிம்பாங் ரெங்காம் ஆகிய பகுதிகளில் புதிய தமிழ்ப் பள்ளிகள் அமையும்,” என்று இங்கு செய்தியாளர்களிடம் பேசிய பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மீதமுள்ள 3 பள்ளிகளுக்கான நிலம் தொடர்பான விவகாரங்களைக் கையாண்டு வருவதாகக் குறிப்பிட்ட அவர், இந்தாண்டுக்குள் அப்பணிகள் முடிவடையும் என்றார்.

ஜோகூரில் தற்போது 70 தமிழ்ப் பள்ளிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

2015ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தமிழ்ப் பள்ளிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 50 மில்லியன் ஒதுக்கீட்டிலிருந்து உரிய நிதியைப் பெறுவதற்காக, மத்திய அரசுக்கு ஒரு பரிந்துரையை அனுப்புவதற்காக  மாநில மஇகா தகவல்களைத் திரட்டி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.