Home நாடு சமூக போராட்டவாதிகள் சட்டத்திற்கு பதில் தந்தாக வேண்டும் – தலைமை வழக்கறிஞர்

சமூக போராட்டவாதிகள் சட்டத்திற்கு பதில் தந்தாக வேண்டும் – தலைமை வழக்கறிஞர்

529
0
SHARE
Ad

Ghani Patail AGபாங்கி, அக்டோபர் 28 –  அலி அப்துல் ஜலில் உள்ளிட்ட சமூகப் போராட்டவாதிகள் என்று கூறிக் கொள்பவர்கள் தங்களது செயல்பாட்டுக்குரிய பின்விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும் என அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் (அட்டர்னி ஜெனரல்)  டான்ஸ்ரீ அப்துல் கனி பட்டேல் (படம்) கூறியுள்ளார்.

“அனைத்து போராட்டவாதிகளும் தங்கள் செயல்பாட்டுக்குரிய பதில்களை தந்தே ஆக வேண்டும். நீங்கள் செய்தது என்ன என்பதை அறிவீர்கள் எனில், அது குறித்து பதில் அளியுங்கள்,” என்றார் கனி.

தேச நிந்தனை குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள அலி அப்துல் ஜலில் தற்போது சுவீடனில் அரசியல் அடைக்கலம் கோரியுள்ளார். ஜொகூர் மற்றும் சிலாங்கூர் அரச குடும்பங்களை அவமதித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

“நீங்கள் உறுதியாக நம்பும் ஒரு விஷயத்துக்காக போராடுகிறீர்கள் எனில், நீங்கள் கூறும் அனைத்திற்கும் நீங்களே பொறுப்பேற்க வேண்டும். மாறாக இங்கும் அங்குமாக ஓடத் தேவையில்லை,” என்றும் கனி பட்டேல் கூறியுள்ளார்.

மலேசிய நீதிமன்றங்கள் நியாயமாக செயல்படுவதாகக் குறிப்பிட்ட அவர், அலி ஏதும் தவறாக செய்யவில்லை எனில் அவர் எது குறித்தும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்றார்.