Home உலகம் நியூசிலாந்து நீதிமன்றம் ரிஸல்மானுக்கு ஜாமின் வழங்கியது!

நியூசிலாந்து நீதிமன்றம் ரிஸல்மானுக்கு ஜாமின் வழங்கியது!

505
0
SHARE
Ad

Muhammad Rizalman Ismailபெட்டாலிங் ஜெயா, அக்டோபர் 28 – பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அந்நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் மலேசிய தூதரக அதிகாரி முகமட் ரிஸல்மானுக்கு வெலிங்க்டன் மாநில நீதிமன்றம் ஜாமின் இன்று வழங்கியது.

நியூசிலாந்து நாட்டின் வெலிங்டன் நகரில் உள்ள புரூக்லி என்ற இடத்தில், தனியா என்ற பெண்ணை பின் தொடர்ந்து சென்ற முகமட் ரிஸல்மான் (வயது 38), தனியாவின் வீட்டில் அவரை கற்பழிக்க முயன்றார் என்று குற்றச்சாட்டப்பட்டு, கடந்த மே 9 -ம் தேதி, அந்நாட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.