Home நாடு “குழந்தைகளை யார் பராமரிப்பது” – நூருல் ஈசா, ராஜா அகமட் இடையே இன்னும் இணக்கம் காணப்படவில்லை

“குழந்தைகளை யார் பராமரிப்பது” – நூருல் ஈசா, ராஜா அகமட் இடையே இன்னும் இணக்கம் காணப்படவில்லை

1115
0
SHARE
Ad

Nurul Izzah Anwarகோலாலம்பூர், அக்டோபர் 29 –  தங்களின்  தாம்பத்தியத்தின் வழி பிறந்த  குழந்தைகளை யார் பராமரிப்பது என்பது தொடர்பில் நூருல் ஈசாவும் அவரது கணவர் ராஜா அகமட் ஷரிரும் இன்னும் உரிய தீர்வைக் காணவில்லை.

தனது மனைவியை விவாகரத்து செய்ய விருப்பம் இல்லை என்றும், தனது மனைவியையும் இரு பிள்ளைகளையும் இன்னும் நேசிப்பதாகவும் லெம்பா பந்தாய் நாடாளுமன்ற உறுப்பினரான நூருல் ஈசாவின் கணவரான ராஜா அகமட் கீழ் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று புதன்கிழமை நடந்த விசாரணையின்போது இருவரும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. நூருல் ஈசா சார்பில் அவரது வழக்கறிஞர் ரம்லி ஆஜரானார்.
குழந்தைகளை யார் பராமரிப்பது என்பது தொடர்பில் கடந்த வாரமே தனது கணவருக்கு நூருல் ஈசா மின்னஞ்சல் அனுப்பி இருந்ததாகவும், இதுகுறித்து முடிவெடுக்க தனது மனுதாரருக்கு அவகாசம் தேவைப்படுவதாகவும் ராஜா அகமட்டின் வழக்கறிஞர் அஸ்மி தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

“வேறு வழியில்லை என்றால் ராஜா அகமட் தனது தரப்பு வாதங்களைத் தொடங்க வேண்டும் என்றும், இதற்கு டிசம்பர் 8ஆம் தேதி வரை மட்டுமே அவகாசம் உள்ளது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது,” என்றார் அஸ்மி.

தனது 7 வயது மகள், 4 வயது மகனை தனது பராமரிப்பில் விடக்கோரி நூருல் ஈசா கடந்தாண்டு ஏப்ரல் 30ஆம் தேதி மனுத்தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.