Home தொழில் நுட்பம் புற்றுநோய், மாரடைப்பைக் கண்டறியும் நானோ துகள் ஆராய்ச்சியில் கூகுள்!

புற்றுநோய், மாரடைப்பைக் கண்டறியும் நானோ துகள் ஆராய்ச்சியில் கூகுள்!

581
0
SHARE
Ad

Google_AP_2177044fசான் பிரான்சிஸ்கோ, அக்டோபர் 30 – கூகுள் நிறுவனத்தின் மருத்துவ ஆராய்ச்சிப் பிரிவு புற்றுநோய், மாரடைப்பு மற்றும் பிற நோய்களை துவக்க நிலையிலேயே கண்டறி புதிய அறிவியல் முறை ஒன்றை பரிச்சோதித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த புதிய முயற்சியில் காந்தத் தன்மை கொண்ட நானோ துகள்கள் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்படுகின்றது.

கூகுள் எக்ஸ் ஆராய்ச்சி மையத்தின் அறிவியல் குழுவினர், நடைமுறையில் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், பல்வேறு ஆராய்ச்சிகளின் பலனாய் நானோ துகள்களின் உதவியோடு மனித உடலினுள் ரத்த ஓட்டத்தில் ஏற்படும் பாதிப்புகளை உணர்கருவிகள் மூலம் கண்டறியும் புதிய தொழில்நுட்பத்தை கண்டறிந்துள்ளனர். ஆரம்பகட்ட நிலையில் உள்ள இந்த புதிய முறையில், இதுவரை நடத்தப்பட்ட பரிசோதனை முயற்சிகள் நேர்மறையான விளைவுகளையே தந்துள்ளன.

#TamilSchoolmychoice

இந்த ஆராய்ச்சி குறித்து கூகுள் எக்ஸ் மையத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் கான்ட்ராட் கூறுகையில், “நானோ தொழில்நுட்பம் மருத்துவ துறையில் புதிதாக அறிமுகமாகி உள்ளது. நமது தலைமுடியை விட 10,000 மடங்கு சிறியதான நானோ துகள்கள், மாத்திரை போன்று மனிதர்கள் உடலில் செலுத்தப்படும். அவை ரத்தத்தில் கலந்து, இதய ரத்த குழாயில் ஏதேனும் பாதிப்பு இருக்கிறதா அல்லது கீமோதெரபி சிகிச்சைக்கு பின் புற்று நோய் பரவுகிறதா என்பது போன்ற சிக்கலான நோய்களின் அறிகுறிகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, நோயின் தாக்கத்தை துவக்கத்திலேயே தடுத்து வெற்றிகரமாக சிகிச்சை அளிக்க வழிவகுக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.

கூகுளின் இந்த புதிய முயற்சி வெற்றி பெற்றால், மருத்துவத் துறையில் அது மாபெரும் புரட்சியாக இருக்கும். எனினும், நானோ துகள்கள் மனித உடலில் செலுத்தப்படும் பொழுது எத்தகைய பின்விளைவுகளையும் ஏற்படுத்தாது என்பதை நிரூபிக்கும் மிகப் பெரும் சவால் கூகுள் நிறுவனத்திற்கு காத்து இருக்கின்றது.