Home தொழில் நுட்பம் மைக்ரோசாப்ட்டில் பல்வேறு பிரிவுகளில் இருந்து 3000 ஊழியர்கள் பணி நீக்கம்! 

மைக்ரோசாப்ட்டில் பல்வேறு பிரிவுகளில் இருந்து 3000 ஊழியர்கள் பணி நீக்கம்! 

539
0
SHARE
Ad

microsoft-software-1024x661கோலாலம்பூர், அக்டோபர் 31 – மைக்ரோசாப்ட் நிறுவனம்,  கடந்த புதன்கிழமை தனது பல்வேறு பிரிவுகளில் பணிபுரியும் சுமார் 3000-ம் ஊழியர்களை பணி நீக்கம் செய்தது.

கடந்த ஜூலை மாதம், எதிர்கால நிதி நிலையைக் கருத்தில் கொண்டு சுமார் 18000 ஊழியர்களை பணி நீக்கம் செய்யப்போவதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெல்லா அறிவித்து இருந்தார்.

இந்நிலையில் ஊழியர்களை குறைக்கும் பணியில் ஒரு பகுதியாக புதன்கிழமை சுமார் 3000 ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்துள்ளன.

#TamilSchoolmychoice

உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட்டின் தலைமைப் பொறுப்பினை நாதெல்லா ஏற்றது முதல் நிறுவனத்தின் தயாரிப்பு, நிர்வாகம் உள்ளிட்ட முக்கியத்துறைகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்த ஜூலை மாதம்  வெளியான பணி நீக்க அறிவிப்பினால் பெரிதாக பாதிக்கப்பட்டது நோக்கியா நிறுவனத்தில் பணியாற்றியவர்கள் தான். மைக்ரோசாப்ட் நோக்கியா நிறுவனத்தை அதிகாரப்பூர்வமாக கைப்பற்றியது முதல், இந்த வேலை நீக்கம் நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த பணி நீக்கம் குறித்து மைக்ரோசாப்ட்டின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், “கடந்த ஜூலை மாதம் அறிவிக்கப்பட்டது போல் 18000 ஊழியர்களை பணி நீக்கம் செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது, நிதி, தயாரிப்பு, மேலாண்மை, மனித வள மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் இருந்து 3000 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுகின்றனர். ”

“இவர்கள் பல்வேறு நாடுகளில் உள்ள மைக்ரோசாப்ட்டின் பல பிரிவுகளில் பணியாற்றி வந்தவர்கள். மைக்ரோசாப்ட்டின் தலைமை இடமான வாஷிங்டனில் உள்ள ரெட்மூன் பிரிவில் மட்டும் 638 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்” என்று அவர் கூறியுள்ளார்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தில் ஊழியர்களை பணி செய்யும் நடவடிக்கைகள் ஏறக்குறைய முற்று பெற்றதாகக் கூறப்படுகின்றது. 18000ஊழியர்களின் பணி நீக்கத்திற்குப் பிறகு,அந்நிறுவனத்தில் பணி செய்யும் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 110,000என்று கணக்கிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.