Home இந்தியா மனைவி, மகனுடன் விஜயகாந்த் மீண்டும் மலேசியா வருகை!

மனைவி, மகனுடன் விஜயகாந்த் மீண்டும் மலேசியா வருகை!

594
0
SHARE
Ad

Vijayakanth-59th-birthdayகோலாலம்பூர், அக்டோபர் 31 – தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மகன் சண்முக பாண்டியன் ஆகியோர் நேற்று காலை 11:50 மணிக்கு  சென்னையில் இருந்து கோலாலம்பூர் வரும்  ‘மலேசியன் ஏர்லைன்ஸ்’ விமானத்தில்  மலேசியா வந்துள்ளனர்.

காலை  10:15 மணியளவில் சென்னை பன்னாட்டு விமான நிலைய புறப்பாடு பகுதிக்கு, விஜயகாந்த் கார் வந்து நின்றது. அதில் இருந்து விஜயகாந்த், பிரேமலதா, சண்முகம் ஆகியோர் இறங்கி, விமான நிலையத்துக்குள் சென்றனர். அப்போது தான் விஜயகாந்த், தன் குடும்பத்தினருடன் வெளிநாடு செல்ல இருந்தது தெரியவந்தது.

இந்தத் தகவல் வெளியே தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. அதனால், விமான நிலையத்தில் குடும்பத்தினருடன் விஜயகாந்தை பார்த்ததும், உளவு பிரிவு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

#TamilSchoolmychoice

‘விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பிற்காக, அவர் குடும்பத்துடன் மலேசியா வந்துள்ளதாக கூறப்படுகிறது. இங்கு ஒரு மாத காலம் நடக்கும் படப்பிடிப்பு வேலைகளை முடித்து தான், விஜயகாந்த், சென்னை திரும்புவார்’ என்று, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

விஜயகாந்தின் மலேசியா பயணம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததால், அவரை வழியனுப்ப கட்சியினர் யாரும் விமான நிலையத்திற்கு வரவில்லையாம்.