Home நாடு எம்எச்370 பயணியின் மகன்கள் மாஸ் நிறுவனம் மீது வழக்கு!

எம்எச்370 பயணியின் மகன்கள் மாஸ் நிறுவனம் மீது வழக்கு!

681
0
SHARE
Ad

MH370 (2)கோலாலம்பூர், அக்டோபர் 31 – மாயமான எம்எச்370 விமானத்தில் பயணம் செய்த பயணியின் இரு பிள்ளைகள், மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்துள்ளனர்.

13 மற்றும் 11 வயது நிரம்பிய அந்த இரு சிறுவர்களும், தங்களது தாயார் நங் பியர்ல் மிங்குடன் சேர்ந்து, மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம், உள்நாட்டு விமானப்போக்கு வரத்துத்துறை இயக்குநர், குடிநுழைவுத்துறை இயக்குநர், விமானப்படையின் தலைவர் மற்றும் அரசாங்கம் ஆகியோர் மீது வழக்குத் தொடுத்துள்ளனர்.

கடந்த மார்ச் 8-ம் தேதி, தொழிலதிபரான தங்களது தந்தை ஜீ ஜிங் ஹங் (வயது 41) கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங்கிற்கு எம்எச்370 விமானத்தில் சென்றதாகவும், விமான டிக்கெட் வாங்கும் பொழுது மாஸ் நிறுவனத்துடன் பாதுகாப்பான பயணத்திற்கான ஒப்பந்தத்தையும் அவர் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் தங்களது வழக்கில் குறிப்பிட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

மார்ச் 8-ம் தேதி காலை 6.30 மணிக்கு பெய்ஜிங்கில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்காத காரணத்தால், மாஸ் நிறுவனம் தங்களது ‘பாதுகாப்பான பயண’ ஒப்பந்தத்தை மீறிவிட்டது என்றும், தங்களது கடமையை மாஸ் நிறுவனம் சரியாக செய்யத் தவறிவிட்டது என்றும் அவர்கள் தங்களது மனுவில் தெரிவித்துள்ளனர்.

இந்தியப் பெருங்கடலில் விழுந்ததாக நம்பப்படும் எம்எச்370 விமானத்தை தேடும் பணி தொடர்ந்து பல மாதங்களாக நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.