Home இந்தியா தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து ஞானதேசிகன் திடீர் ராஜினாமா!

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் பொறுப்பில் இருந்து ஞானதேசிகன் திடீர் ராஜினாமா!

955
0
SHARE
Ad

gnadesiganசென்னை, அக்டோபர் 31- தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக பி.எஸ்.ஞானதேசிகன் பணியாற்றி வந்தார். சமீபகாலமாக தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவார் என்ற பேச்சு அடிபட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று ஞானதேசிகன் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.

அவர் தனது ராஜினாமா கடிதத்தை கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பினார். ராஜினாமா பற்றியும், அதற்கான காரணம் குறித்தும் ஞானதேசிகனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

“ஆம், நான் எனது ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு அனுப்பியுள்ளேன். எனது ராஜினாமாவுக்கு பல காரணங்கள் இருக்கிறது. கடந்த ஒரு மாதமாக தமிழக காங்கிரஸ் தலைவர் மாற்றப்படுவார் என்ற பேச்சு எழுந்தது.”

#TamilSchoolmychoice

“இதுபோன்ற பேச்சுகளை தடுக்க கட்சி மேலிடம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக என்னுடன் கலந்தாலோசிக்கவும் இல்லை. எனக்கென்று சுயமரியாதை இருக்கிறது. நான் ஒரு பொம்மையாக இருக்க விரும்பவில்லை” என ஞானதேசிகன் கூறினார்.

சோனியாகாந்திக்கு, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஞானதேசிகன் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:- “கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக பணியாற்ற வாய்ப்பு கொடுத்ததற்காக உங்களுக்கும், துணைத் தலைவர் ராகுல் காந்திக்கும் என் இதயமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்”.

“கட்சியில் ஒற்றுமையை கொண்டுவர முயன்றேன். முடிந்த அளவு பாடுபட்டேன். பல கூட்டங்களை நடத்தியுள்ளேன். மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்தேன், நாடாளுமன்ற ஆய்வுக்குழு கூட்டங்களை நடத்தியுள்ளேன். இதுமட்டுமல்லாமல் கட்சியின் தலைமை அலுவலகத்தில் சிறிய அளவில் கூட்டத்தையும் நடத்தியுள்ளேன்”.

“எந்தவித இடையூறும் இல்லாமல் மாநில காங்கிரஸ் கட்சியை மாற்றி அமைக்க உங்களுக்கு வழிவகை செய்யும் வகையில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் பொறுப்பை ராஜினாமா செய்கிறேன். இதை ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன் என அந்த கடிதத்தில் ஞானதேசிகன் கூறியுள்ளார்.