Home உலகம் போபால் விஷவாயு சம்பவத்திற்கு காரணமான யூனியன் கார்பைடு நிறுவன அதிபர் ஆண்டர்சன் மரணம்! 

போபால் விஷவாயு சம்பவத்திற்கு காரணமான யூனியன் கார்பைடு நிறுவன அதிபர் ஆண்டர்சன் மரணம்! 

565
0
SHARE
Ad

anrashan,புளோரிடா, நவம்பர் 1 – இந்தியாவில் கடந்த 1984–ம் ஆண்டு பல ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கி போபால் விஷவாயு சம்பவத்திற்கு காரணமாக இருந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தின் அதிபர் வாரன் ஆண்டர்சன், கடந்த செப்டம்பர் மாதம் 29-தேதி, தனது 92-வது வயதில் மரணம் அடைந்தார்.

அவர் ஒரு மாதம் முன்பே மரணமடைந்து இருந்தாலும், அது பற்றிய அறிவிப்புகள் சமீபத்தில் தான் வெளியாகி உள்ளன. கடந்த 1984-ம் ஆண்டு மத்தியப் பிரதேச மாநிலத் தலைநகர் போபாலில் செயல்பட்டு வந்த யூனியன் கார்பைடு நிறுவனத்தின் ஆலையில் இருந்து விஷவாயு வெளியேறி காற்றில் கசிந்தது.

அதனை சுவாசித்த பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அதன் வீரியம் பல தலைமுறைகளைத் தாண்டி இன்னும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது.

#TamilSchoolmychoice

ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாவதற்கு காரணமாக இருந்த இந்த சம்பவத்தில் வாரன் ஆண்டர்சன் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு பின்னர் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.

எனினும், அவரை இந்தியாவிற்கு கொண்டுவர எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது. ஆண்டர்சன் மரணம் பற்றி பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் கூறுகையில்,

“ஆண்டர்சன் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட போதிலும், அமெரிக்காவின் ஆதிக்கம் காரணமாக அவர் இந்தியாவில் இருந்து தப்பித்தார். தற்போது அவரது மரணத்துடன், பாதிக்கப்பட்ட மக்களின் நீதியும் புதைக்கப்பட்டு விட்டது” என்று கூறியுள்ளனர்.