ஆட்டம் முடிவடைந்தும் இரு குழுக்களும் 2-2 கோல் எண்ணிக்கையில் சம எண்ணிக்கையில் இருந்ததால், பினால்டி கோல்கள் மூலம் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் முடிவு எடுக்கப்பட்டது.
பினால்டி கோல்களில் 5-3 எண்ணிக்கையில் வெற்றி பெற்ற பகாங் குழு இதன் மூலம் தனது வெற்றியாளர் தகுதியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.
கடந்தாண்டும் மலேசியக் கிண்ண வெற்றியாளர் பகாங்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
காற்பந்து, மக்களின் விளையாட்டு என்பதை அங்கீகரிக்கும் வண்ணமும், பகாங் மாநிலத்தின் சாதனைக்குப் பரிசளிக்கும் விதமாகவும் இந்த சிறப்பு விடுமுறை வழங்கப்படுவதாக அட்னான் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் நாளை எஸ்.பி.எம் தேர்வுகள் வழக்கம்போல் நடைபெறும் என்றும் இந்தத் தேர்வில் சம்பந்தப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கும் அதிகாரிகளுக்கும் விடுமுறை கிடையாது என்றும் அட்னான் விளக்கமளித்துள்ளார்.
எஸ்பிஎம் தேர்வு எழுதும் மாணவர்கள் வழக்கம்போல் தேர்வு எழுதச் செல்ல வேண்டும் என்றும் அட்னான் கேட்டுக் கொண்டார்.