Home கலை உலகம் ஹிருத்திக் ரோஷன்-சுசனே தம்பதிகளுக்கு விவாகரத்து வழங்கப்பட்டது

ஹிருத்திக் ரோஷன்-சுசனே தம்பதிகளுக்கு விவாகரத்து வழங்கப்பட்டது

570
0
SHARE
Ad

மும்பை, நவம்பர் 2 – இந்திப் படவுலகின் முன்னணி நடிகர் ஹிருத்திக் ரோஷன். கட்டான உடலமைப்பாலும், நளினமான நடனங்களாலும், இரசிகர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டவர்.

அண்மையில் இவர் கத்ரினா கைஃப்புடன் இணைந்து நடித்து வெளிவந்த ‘பேங் பேங்’ இந்திப் படம், நூறு கோடி ரூபாய்க்கும் மேல் உலகம் எங்கும் வசூல் செய்து வெற்றிப் படமாக அமைந்தது.

இரசிகைகள் அவரை மொய்த்துக் கொண்டும், சக நடிகைகள் அவர் மீது ஒரு கண் வைத்தும் இருந்த காலகட்டத்தில் தனக்கு சிறு வயது முதல் நன்கு அறிமுகமான சுசனே கான் என்பவரை மணந்து கொண்டார் ஹிருத்திக்.

#TamilSchoolmychoice

Hrithik-Roshan-Suzanne-Khan

மிகப் பிரமாதமான அழகியான சுசனே, அந்தக் காலத்தின் பிரபல இந்தி நடிகர் சஞ்சய் கான் என்பவரின் மகளாவார்.

சஞ்சய் கானின் சகோதரர்தான் பெரோஸ்கான். இவர்தான் ‘குர்பானி’ என்ற வசூலில் சக்கைப் போடு போட்ட படத்தின் கதாநாயகனும், இயக்குநரும் ஆவார்.

கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்த ஹிருத்திக் ரோஷன், சுசனே தம்பதிக்கு விவாகரத்து வழங்கி மும்பை குடும்பநல கோர்ட்டு உத்தரவிட்டது.

2 மகன்கள்

Hrithik Roshan,ஹிருத்திக் ரோஷனும், சுசனேவும் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் காதலித்து, கடந்த 2000–ம் ஆண்டு டிசம்பர் 20–ந் தேதி திருமணம் செய்தனர். அவர்களுக்கு ரேகான் (வயது 7), ஹிரதான் (5) என்ற 2 மகன்கள் இருக்கிறார்கள்.

ஏறத்தாழ 13 ஆண்டுகள் இனிமையுடன் இணைந்து வாழ்ந்த ஹிருத்திக் ரோஷன்– சுசனே இருவருக்கும் இடையில் உருவான கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 14–ந் தேதி சுசனே, ஹிருத்திக் ரோஷனை விட்டு பிரிந்து தனது தாயார் வீட்டுக்கு சென்று விட்டார்.

அப்போது ஹிருத்திக் ரோஷன் இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், “எங்களது 13 ஆண்டுகால திருமண பந்தத்தை முறித்துக் கொண்டு சுசனே பிரிந்து செல்ல முடிவு செய்துவிட்டார்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இருவருக்கும் இடையில் பரஸ்பர மரியாதை

தனது காதல் கணவரை பிரிந்தது பற்றி சுசனே கூறுகையில், “நாங்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த மரியாதையும், அக்கறையும் வைத்திருக்கிறோம். எங்களது தனிப்பட்ட விருப்பங்களை இப்போது தேர்வு செய்து இருக்கிறோம். மேலும், நாங்கள் அழகிய 2 குழந்தைகளின் பெற்றோர். அவர்களை பேணி, பாதுகாப்பது எங்கள் பொறுப்பு. இதில் எந்த மாற்றமும் இல்லை’’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் ஹிருத்திக் ரோஷனும், சுசனேவும் தங்களுக்கு விவாகரத்து வழங்க கோரி மும்பை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனு மீதான இறுதிக்கட்ட விசாரணை நேற்று நடந்தது.

விவாகரத்து

விசாரணை முடிவில் ஹிருத்திக்ரோஷன்– சுசனே தம்பதிக்கு விவாகரத்து வழங்கி நீதிபதி உத்தரவிட்டார். பின்னர் அவர்கள் இருவரும் நீதிமன்றத்தை விட்டு வெளியில் வந்தனர். தனித்தனி காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

குழந்தைகளை பராமரிக்கும் பொறுப்பு இருவருக்கும் இணைந்து வழங்கப்பட்டதாக ஹிருத்திக்கைப் பிரதிநிதித்த வழக்கறிஞர் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.