Home நாடு எம்எச்17 பாகங்கள் கொண்டு வரப்பட்டு நினைவுச்சின்னம் அமைக்கப்படும் – லியாவ் தகவல்

எம்எச்17 பாகங்கள் கொண்டு வரப்பட்டு நினைவுச்சின்னம் அமைக்கப்படும் – லியாவ் தகவல்

592
0
SHARE
Ad

liowகோத்தா பாரு, நவம்பர் 3 – வெடித்து சிதறிய எம்எச்17 விமானத்தின் எஞ்சிய பாகங்கள் மலேசியாவிற்கு கொண்டு வரப்பட்டு இங்கு நினைவுச் சின்னமாக வைக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய் தெரிவித்துள்ளார்.

டச்சு அதிகாரிகள் மற்றும் மற்ற விசாரணைகள் அனைத்தும் நிறைவடைந்த பின்னர், விமானத்தின் பாகங்கள் மலேசியாவிற்கு கொண்டு வரப்படும் என்றும் லியாவ் உறுதியளித்தார்.

இது குறித்து நேற்று கிளந்தான் மலேசியன் சாலை பாதுகாப்பு குழுவின் ஆண்டுக் கூட்டத்தில் கலந்து கொண்ட லியாவ் பேசுகையில், “அத்தனை மலேசியர்களின் உயிரை பலி கொண்ட சம்பவத்தை நினைவு கூறும் விதமாக எம்எச்17 பாகங்களை கொண்டு வந்து முடிந்தால் அதை மறுசீரமைப்பு செய்து பொதுமக்கள் பார்வையிடும் வண்ணம் நினைவு சின்னமாக வைக்கப்படும்” என்று தெரிவித்தார்.

#TamilSchoolmychoice