Home உலகம் நைஜீரியாவில் கடத்தப்பட்ட 219 மாணவிகளுக்கும் திருமணமாகி விட்டது – போக்கோ ஹரம் அறிவிப்பு!

நைஜீரியாவில் கடத்தப்பட்ட 219 மாணவிகளுக்கும் திருமணமாகி விட்டது – போக்கோ ஹரம் அறிவிப்பு!

636
0
SHARE
Ad

naigereeyaஅபுஜா, நவம்பர் 3 – நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் உள்ள சிபோக் என்ற இடத்தில், கடந்த ஏப்ரல் மாதம் 276 பள்ளி மாணவிகள் போக்கோ ஹரம் தீவிரவாதிகளால் பிணைக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.

தீவிரவாதிகளிடமிருந்து சில மாணவிகள் தப்பி வந்த நிலையில், மீதமுள்ள 219 மாணவிகளுக்கும் திருமணமாகி விட்டது என போக்கோ ஹரம் தீவிரவாதிகள் தற்போது அறிவித்துள்ளனர்.

நைஜீரிய அரசு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தீவிரவாதிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியது. இதில் இரு தரப்பிற்கும் ஏற்பட்ட உடன்பாடுகளின் அடிப்படையில் போர் நிறுத்தத்திற்கு போக்கோ ஹரம் அமைப்பினர் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், விரைவில் கடத்தப்பட்டுள்ள 219 மாணவிகளும் மீட்கப்படுவர் என்றும் அறிவித்து இருந்தது.

#TamilSchoolmychoice

naigireeyaஇந்நிலையில், போக்கோ ஹரம் இயக்கத்தின் தலைவன் அபூபக்கர் ஷேக்காவு, சமீபத்தில் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளான். அந்த காணொளியில் நைஜீரிய அரசின் சமாதான உடன்படிக்கைக்கு மறுப்பு தெரிவித்துள்ளான். மேலும் அவன் அந்த காணொளி மூலம் கூறியதாவது:-

“கடத்தப்பட்ட மாணவிகள் தொடர்பான விவகாரத்தை நான் மறந்து நெடுநாட்களாகி விட்டது. இனி அவர்கள் பற்றிய பேச்சிற்கே இடமில்லை. அவர்கள் அனைவருக்கும் நான் எப்போதோ திருமணம் செய்து வைத்து விட்டேன். இந்தப் போரில் பின்வாங்குவது என்பதே கிடையாது” என்றும் அவன் தெரிவித்துள்ளான்.