Home இந்தியா மீண்டும் தமாகா.வை தொடங்குவது பற்றி இன்று இறுதி முடிவை அறிவிப்பதாக ஜி.கே.வாசன் பேட்டி

மீண்டும் தமாகா.வை தொடங்குவது பற்றி இன்று இறுதி முடிவை அறிவிப்பதாக ஜி.கே.வாசன் பேட்டி

531
0
SHARE
Ad

gk-vasanகோவை, நவம்பர் 3 – மீண்டும் த.மா.கா.வை தொடங்குவது பற்றி ஜி.கே.வாசன் இன்று தனது இறுதி முடிவை அறிவிக்கிறார். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியில் விரிசல் ஏற்பட்டுள்ள பரபரப்பான நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் நேற்று கோவை விமான நிலையத்தில் ஜி.கே.வாசன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- “கடந்த இரண்டு மூன்று நாட்களாக இயக்கத்தின் முக்கிய தலைவர்கள் தொண்டர்களை சந்தித்து வருகிறேன். அவர்கள் தங்களுடைய எண்ணங்கள், யூகங்கள், வருங்கால வளர்ச்சிக்குண்டான கருத்துகளை என்னிடம் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள்.”

“கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினேன். சென்னையிலும் மற்ற மாவட்ட நிர்வாகிகளை சந்திக்க இருக்கிறேன். இவர்கள் அளித்த மொத்த கருத்துக்களை, ஒருமித்த கருத்தாக பிரதிபலிப்பதற்காக நாளைய தினம் (இன்று) என்னுடைய இறுதி முடிவை அறிவிக்க இருக்கிறேன்.”

#TamilSchoolmychoice

“காங்கிரஸ் வளர்ச்சிக்கு பெருந்தலைவர் காமராஜர், மூப்பனார் உள்ளிட்ட பல தலைவர்கள் பாடுபட்டனர். தமிழ்நாட்டில் பெரும்பாலான காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் காமராஜரின் பாசறையில் பயின்றவர்கள்.”

GK-Vasan“மக்கள் தலைவர் மூப்பனார், மறைந்த தமிழக தலைவர்களின் வழியில் நடந்தவர்கள் அத்தனை பேரின் எண்ணங்களை பிரதிபலிக்கவும்,  அவர்களுடைய கனவை நனவாக்கும் வகையிலும் செயல்பட முடிவு செய்துள்ளோம்”.

“இதற்காக புதிய பாதையை வகுத்து அதன் அடிப்படையில் இயக்கத்துக்கு பலம் சேர்க்கும் வகையில் முடிவுகளை மேற்கொள்ள இருக்கிறோம். அதற்குண்டான இறுதிவடிவத்தை கொடுக்கும் வகையில் நாளைய தினம் (இன்று) அனைவரின் எண்ணங்களை பிரதிபலிப்பேன்.”

“எங்களது புதியபாதை வெற்றிப்பாதையாக இருக்கும் என்ற கருத்தில் மாற்றம் இருக்காது. வெற்றிப்பாதைக்கு உண்டான வழி என்ன?, இந்த உண்மையான நோக்கம் மக்களின் மனதில் பதியுமா? மக்களின் நம்பிக்கையை அடையுமா? என்ற எண்ணத்தின் அடிப்படையில் புதிய முடிவை எடுக்க உள்ளோம். தமிழ்நாட்டில் மீண்டும் காமராஜரின் பொற்கால ஆட்சியை அமைக்க பாடுபடுவோம்” என ஜி.கே.வாசன் கூறினார்.