Home இந்தியா உலகின் முதல் டெங்கு தடுப்பூசி இந்தியாவில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது!

உலகின் முதல் டெங்கு தடுப்பூசி இந்தியாவில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது!

601
0
SHARE
Ad

aedesegyptiபுதுடெல்லி, நவம்பர் 4 – உலகின் முதல் சிஒய்டி-டிடிவி (CYD-TDV) எனும்  டெங்கு தடுப்பூசி சோதனை முயற்சி இந்தியாவில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.

18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களிடம் பரிசோதிக்கப்பட்ட இந்த சோதனை முயற்சி நேர்மறையான முடிவினைத் தந்ததால், இந்தியாவில் டெங்கு தடுப்பூசி அடுத்த ஆண்டு இறுதிக்குள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது தொடர்பாக டெங்கு தடுப்பூசியைத் தயாரித்த சனோபி பாஸ்டர் எனும் நிறுவனம் கூறியுள்ளதாவது:- ” புதுடெல்லி, லூதியானா, பெங்களூரு, புனே, கொல்கத்தா போன்ற நகரங்களில் 18 முதல் 45 வயது வரையிலானவர்களுக்கு சோதனை முயற்சியாக டெங்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.”

#TamilSchoolmychoice

“சோதனையின் முடிவில் டெங்கு தடுப்பூசி செலுத்தப்பட்டவர்களுக்கு எவ்வித பின்விளைவுகளும் ஏற்படவில்லை. அவர்கள் நலமுடன் இருக்கிறார்கள். நூறுசதவீதம் வெற்றிகரமானதாக அமைந்துள்ள இந்த தடுப்பூசி, பாதுகாப்பானதாகவும், டெங்கு எதிர்ப்பாற்றல் கொண்டதாகவும் இருக்கின்றது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக சனோபி பாஸ்டர் நிறுவனத்தின் டெங்கு தடுப்பூசி திட்டத்திற்கான ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி பிரிவுகளின் தலைவர் நிகோலஸ் சார்லஸ் கூறுகையில்,

“இந்திய அதிகாரிகள் எங்களை டெங்கு தடுப்பூசி சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ள கேட்டுக்கொண்டனர். அதன்பேரில், நாங்கள் நடத்திய இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்றுள்ளது. இது மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த முயற்சியாக அமைந்துள்ளது” என்று அவர் கூறியுள்ளார்.

இந்த டெங்கு தடுப்பு சோதனை முயற்சி, மலேரியா, பரவும் தொற்று நோய்கள் மற்றும் நிபுணர்களின் வருடாந்திர மாநாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.