Home இந்தியா ஜி.கே.வாசன் காங்கிரசிலிருந்து வெளியேறி புதிய கட்சி தொடங்கினார்

ஜி.கே.வாசன் காங்கிரசிலிருந்து வெளியேறி புதிய கட்சி தொடங்கினார்

558
0
SHARE
Ad

21TH_VASAN_1060397fசென்னை, நவம்பர் 4 – தமிழக அரசியல் வட்டாரங்கள் கணித்தபடி முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் (படம்) காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி புதிய கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார்.

இதனால் ஏற்கனவே மக்கள் ஆதரவில் பின்தங்கி இருக்கும் காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் இரண்டாகப் பிளவுபடும். நேற்று வாசன் செய்தியாளர் கூட்டத்தில் புதிய கட்சிக்கான அறிவிப்பை வெளியிட்டபோது அவருடன் மூன்று காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

“காங்கிரஸ் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துக்களையும் உணர்வுகளையும் புரிந்து கொண்ட பின்னர் இந்த முடிவை எடுத்திருக்கின்றேன். புதிய கட்சி காமராஜ் வழியில் நடத்தப்படும். தமிழ் நாட்டின் இளைஞர்கள் புதிய தலைமைத்துவத்தை எதிர்பார்க்கின்றார்கள்” என வாசன் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.

#TamilSchoolmychoice

விரைவில் திருச்சியில் ஒரு மாபெரும் மாநாட்டில் புதிய கட்சியின் பெயர் அறிவிக்கப்படும் என அவர் கூறினார்.

கடந்த 47 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியால் தமிழ் நாட்டில் ஆட்சியைப் பிடித்து வேரூன்ற முடியவில்லை என்பதால் மிகவும் வருத்தப்படுவதாகவும் வாசன் கூறினார்.

கடந்த 1996ஆம் ஆண்டில் தீவிர காங்கிரஸ்வாதியான வாசனின் தந்தை ஜி.கே.மூப்பனார் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கினார். ஆனால் பின்னர் 2002ஆம் ஆண்டில் அந்தக் கட்சியை காங்கிரசோடு இணைத்து காங்கிரசில் ஐக்கியமானார்.

இதே பெயரிலான கட்சியைத் தொடங்கி தனது தந்தையாரின் கனவுகளுக்கு வாசன் உயிர் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதற்கிடையில் வாசன் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தலைமையிடம் அறிவித்துள்ளது.