Home நாடு எம்எச்370 தொலைந்து விட்டது – அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது மாஸ்

எம்எச்370 தொலைந்து விட்டது – அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளது மாஸ்

585
0
SHARE
Ad

MH370

பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 4 – எம்எச்370 விமானம் மாயமாகி விட்டதாக மலேசியா ஏர்லைன்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முன்வந்துள்ளது. இதன் மூலம் பயணிகளின் குடும்பத்தினருக்கு தகுந்த நஷ்ட ஈடு வழங்கவும் அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

மாஸ் நிறுவனத்தின் இயக்குநர் ஹூ டன்லெவி இது குறித்து  ‘நியூசிலாண்ட் ஹெரார்ல்டு’ பத்திரிகைக்கு அளித்துள்ள செய்தியில், “அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கும் தேதி இன்னும் தெரியவில்லை. ஆனால் அறிவிப்பு வெளியானதும் பயணிகளின் குடும்பத்தினருக்கு முழு நஷ்ட ஈடு வழங்குவோம். அதுவரை பயணிகளின் குடும்பத்தினர் அமைதி காக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

பயணிகளின் குடும்பத்தினருக்கு நஷ்ட ஈடாக தலா 175,000 அமெரிக்க டாலர் (582,000 ரிங்கிட்) வழங்கப்படும் என்றும், சட்டப்பூர்வமான நடவடிக்கை மேற்கொண்டு அதற்கு மேலும் நஷ்ட ஈடு வாங்க பயணிகளின் குடும்பத்தினருக்கு சட்டத்தில் இடம் உண்டு என்றும் ஹூ டன்லெவி தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் 8-ம் தேதி அதிகாலை கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் நோக்கிப் புறப்பட்ட எம்எச்370 விமானம் நடுவானில் மாயமானது. தீவிர அனைத்துலக தேடுதல் வேட்டைக்குப் பிறகு விமானம் இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.

தற்போது வரை இந்தியப் பெருங்கடல் பகுதியில் தீவிரத் தேடுதல் வேட்டை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.