Home கலை உலகம் ஒரு வழியாக முடிவுக்கு வந்த லிங்கா!

ஒரு வழியாக முடிவுக்கு வந்த லிங்கா!

436
0
SHARE
Ad

lingaaசென்னை, நவம்பர் 5 – சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் உருவாகி இருக்கும் படம் லிங்கா. இப்படத்தின் முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகி யூடியூபில் எண்ணிக்கை சரமாரியாக சென்று கொண்டு இருக்கிறது.

முன்னோட்டத்தின் கடைசியில் இப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாகும் என்று போடப்பட்டது. இன்னும் படப்பிடிப்பு முடியாத நிலையில் எப்படி வெளியாகும் என்று எண்ணி இருந்தவர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி.

லிங்கா படத்தின் முழு படப்பிடிப்பும் இன்றுடன் முடிவுக்கு வந்தது. டிசம்பர் 12-ம் தேதி லிங்கா படத்தை வெளியிட வேலைகள் தீவிரமாக நடை பெற்று வருகிறது என படக்குழு தெரிவித்தது.

#TamilSchoolmychoice