Home நாடு சபாவில் சுட்டுக்கொல்லப்பட்ட கொள்ளையர்கள் சுலு படையைச் சேர்ந்தவர்கள் – காவல்துறை உறுதி

சபாவில் சுட்டுக்கொல்லப்பட்ட கொள்ளையர்கள் சுலு படையைச் சேர்ந்தவர்கள் – காவல்துறை உறுதி

594
0
SHARE
Ad

Jalaluddin_Abdul_Rahman3110s_640_359_100

கோத்தா கினபாலு, நவம்பர் 5 – சபா மாநிலம் பெனம்பாங்கில் கடந்த வாரம் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட இரு கொள்ளையர்களும் சுலு படையைச் சேர்ந்தவர்கள் தான் என்பதை காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.

இது குறித்து சபா காவல்துறை ஆணையர் டத்தோ ஜலாலுதீன் அப்துல் ரஹ்மான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இரண்டு கொள்ளையர்களில் ஒருவர் ஆர்எஸ்எப் படையின் தலைவர் என்றும், இரண்டு பேருமே சட்டவிரோதமாக குடியேறியவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், இந்த கொள்ளையர்கள் தங்களின் இயக்கங்களுக்கு நிதி சேர்க்கும் வகையில் மலேசியாவில் கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் ஜலாலுதீன் தெரிவித்துள்ளார்.

இந்த கொள்ளையர்களும் போலி கடவுச்சீட்டு மற்றும் அடையாள அட்டைகளைப் பயன்படுத்தி லஹாட் டத்து அல்லது செம்பூர்ணா வழியாக மலேசியாவிற்குள் நுழைந்திருக்கலாம் என்றும் ஜலாலுதீன் தெரிவித்துள்ளார்.

இவர்களைத் தொடர்ந்து மேலும் பல ஆர்எஸ்எப் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் ஜலாலுதீன் தெரிவித்துள்ளார்.