பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 7 – மலேசியக் காவல் துறை அண்மைய சில நாட்களாக சட்டவிரோத சூதாட்டங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.
குறிப்பாக, இணையம் வழியும், கணினி வழியும் நடத்தப்படும் சூதாட்டங்கள் தொடர்பில் பல மையங்களில் அதிரடி முற்றுகைகளை மேற்கொண்டது.
அந்த வரிசையில் சுபாங், ஆரா டாமன் சாராவில் மேற்கொண்ட ஒரு நடவடிக்கையின்போது சட்ட விரோதமாக சூதாட்ட இயந்திரங்களை மறு சுழற்சி மூலம் விற்பனை செய்ததாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த புதன்கிழமை இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் கைதானவர்களில் தமிழ் நாட்டைச் சேர்ந்த நால்வரும் அடங்குவர். இந்தியாவைச் சேர்ந்த ஒரு நபரும், உள்நாட்டைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.
மொத்தம் 500 சூதாட்ட இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சிலாங்கூர் குற்றவியல் பிரிவு (சி.ஜ.டி.) தலைவர் முகமட் அட்னான் கூறினார்.