Home நாடு விவேகானந்தா ஆசிரமத்தை பாரம்பரிய தளமாக பாதுகாப்போம் – அமைச்சர் நஸ்ரி

விவேகானந்தா ஆசிரமத்தை பாரம்பரிய தளமாக பாதுகாப்போம் – அமைச்சர் நஸ்ரி

553
0
SHARE
Ad

timthumbகோலாலம்பூர், நவம்பர் 6 – இந்திய பாரம்பரியத்தின் வழி வந்த டாக்டர் அம்பிகை பாகனும், அவரது நிர்வாகக் குழுவினரும் விவேகானந்தர் ஆசிரமத்தின் அடையாளத்தை அழித்து விட்டு, புதிய அடுக்குமாடி கட்ட முன்வந்திருக்கும் வேளையில், ஒரு மலாய்க்கார அமைச்சர், மலேசிய உணர்வோடு அந்த ஆசிரமத்தைப் பாதுகாக்க முன்வந்திருக்கின்றார்.

தலைநகர் பிரிக்பீல்ட்சில் உள்ள விவேகானந்தா ஆசிரமம் இந்திய சமுதாயத்தின் பாரம்பரிய தளமாக தொடர்ந்து பேணிக் காக்கப்படும் என சுற்றுலா மற்றும் பாரம்பரிய அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி பின் அப்துல் அசீஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

விவேகானந்தா ஆசிரமம் மட்டும்  பாரம்பரிய தளமாக அமையக்கூடாது. மாறாக  விவேகானந்தா ஆசிரமத்தை சுற்றியுள்ள முழு நிலமும் பாரம்பரிய தளமாக காக்கப்படவேண்டும் என நேற்று அந்த ஆசிரமத்திற்கு வருகை தந்த வந்த  டத்தோஸ்ரீ நஸ்ரி பின் அப்துல் அசீஸ் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

நஸ்ரியுடம் இளைஞர் விளையாட்டுத் துறை துணை அமைச்சர் சரவணன், கல்வி துணை அமைச்சர் கமலநாதன், ம.இ.கா. இளைஞர் பகுதித் தலைவர் சிவராஜ், ஈப்போ பாராட் ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் குலசேகரன், சுபாங் கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசா மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் உடன் இருந்தனர்.

ஆசிரமத்தை பார்வையிட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நஸ்ரி, ” விவேகானந்தா ஆசிரமம் 1904 ஆம் அண்டு கட்டப்பட்டது. சுமார் 110 ஆண்டு வரலாற்றைக் கொண்ட இவ்வாசிரமம் இந்திய சமுதாயத்தின் காலாச்சார பொக்கிஷமாகும் என்றும் அதனை பாதுகாக்க வேண்டியது நமது கடமை என்றும் தெரிவித்தார்.

தற்பொழுது இந்த ஆசிரமம் குறித்து பல்வேறு பிரச்சனைகள் வந்து கொண்டே உள்ளது. இதை தடுத்து ஆசிரமத்தின் அறங்காவலர்களும் இந்திய சமுதாயத்தினரும் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து ஆசிரமத்தை நிலை நிறுத்த பாடுபட வேண்டும் எனவும் கேட்டுகொண்டார் நஸ்ரி பின் அப்துல் அசீஸ்.