Home வாழ் நலம் உடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகள்!

உடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகள்!

1292
0
SHARE
Ad

Fresh-juices-fruitsநவம்பர், 5 – உடல் எடையை குறைக்க பல்வேறு வழிகள் உள்ளன. அவற்றில் ஒன்று பழச்சாறு மூலம் எடையை குறைப்பது. அது எப்படி பழச்சாறு குடிப்பதன்  மூலம் எடையை குறைக்க முடியும் என கேட்கிறீர்களா.

உண்மையிலேயே பழச்சாறு குடித்தால் அடிக்கடி பசி ஏற்படுவதை குறைத்து நீண்ட நேரம் வயிற்றினை நிறைத்து வைத்திருக்கும். இதனால் கண்ட  உணவு பொருட்களை சாப்பிடமாட்டோம். இப்போது உடல் எடையை குறைக்க உதவும் பழச்சாறுகளை பார்ப்போம்.

எலுமிச்சை பழச்சாறு:

#TamilSchoolmychoice

பொதுவாக எலுமிச்சை உடல் எடைக்குறைப்பதற்கு முக்கிய பங்கு. அதிலும் ஏழே நாட்களில் எடையில் மாற்றம் தெரிய, எலுமிச்சை  பழச்சாற்றில் சிறிதளவு உப்பு, மற்றும் தேன் சேர்த்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்தால், உடலில் தங்கியுள்ள தேவையற்ற கொழுப்புகள்  கரையும்.

Fruit-Juice-good-for-you4தக்காளி பழச்சாறு: 

ஏழே நாட்களில் எடையில் நல்ல மாற்றம் வேண்டுமெனில், 3 தக்காளியை வேக வைத்து அதனை அரைத்து, அதில் வெல்லம் சேர்த்து  தினமும் மூன்று வேளை குடித்து வரவேண்டும்.

திராட்சை பழச்சாறு: 

திராட்சை பழச்சாற்றில் வைட்டமின்கள் மற்றும் நல்ல கொழுப்புகள் இருப்பதால், இதனை சாறெடுத்து குடித்து வந்தால், உடல்  எடை குறைவதோடு, சருமமும் நன்கு பொலிவோடு இருக்கும்.

கொய்யா பழச்சாறு: 

கொய்யாவில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால், இதனை வாரத்திற்கு இரண்டு நாட்கள் வெறும் வயிற்றில் குடித்து  வந்தால், அது உடலில் உள்ள கொழுப்புக்களை கரைத்துவிடும்

fruit-juiceஆரஞ்சு பழச்சாறு:

ஆரஞ்சு பழச்சாறு குடித்தாலும், எடையில் மாற்றம் தெரியும். அதிலும் ஆரஞ்சுப் பழச்சாற்றில் சிறிது தேன் சேர்த்து குடிக்க  வேண்டும். குறிப்பாக வெதுவெதுப்பான தண்ணீரில் பழச்சாறு சேர்த்து குடிக்க வேண்டும்.

அன்னாசி பழச்சாறு:

அன்னாசியை மட்டும் அரைத்தால், அது கெட்டியாக இருக்கும். ஆகவே அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து  பசியாக இருக்கும் நேரத்தில் குடித்தால் பசியானது உடனே அடங்கும்.