Home உலகம் அமெரிக்க இடைத்தேர்தலில் எதிர்க்கட்சி ஆதிக்கம் – ஒபாமாவிற்கு பெரும் பின்னடைவு!

அமெரிக்க இடைத்தேர்தலில் எதிர்க்கட்சி ஆதிக்கம் – ஒபாமாவிற்கு பெரும் பின்னடைவு!

339
0
SHARE
Ad

Barack Obamaவாஷிங்டன், நவம்பர் 6 – அமெரிக்காவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இடைத்தேர்தலில், எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி பெரும்பான்மையான இடங்களில் அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் அந்த கட்சி பெரும்பான்மை பெற்றுள்ளது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும், செனட் சபையின் 36 இடங்களுக்கும் மற்றும் 36 மாகாணங்களுக்கான ஆளுநர் பதவிகளுக்கும் இடைத்தேர்தல் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. ஒபாமாவின் ஆட்சிக்கு எதிராக மக்கள் கடும் விமர்சனங்களை செய்து வந்த நிலையில், அங்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

பொது நோக்கர்கள் குடியரசுக் கட்சி பெருவாரியான இடங்களைக் கைப்பற்றும் என்று கூறிவந்த நிலையில், நேற்று இடைத்தேர்தலின் முடிவுகள் வெளியாயின.

#TamilSchoolmychoice

விமர்சகர்களின் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், 100 இடங்களைக் கொண்ட செனட் சபையில், குடியரசுக் கட்சி பல இடங்களில் வெற்றி வாகை சூடியது. இதன் மூலம் செனட் சபையில் அக்கட்சியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 45-லிருந்து 52-ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல், பிரதிநிதிகள் சபையைப் பொருத்தவரை, குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் 235 இடங்களில் முன்னிலை வகித்து வருகின்றனர். ஆளும் கட்சிக்கு பெரும்பாலான இடங்களில் பின்னடைவே ஏற்பட்டுள்ளது.

குடியரசுக் கட்சியின் இந்த பெரும் வெற்றிகளால், அமெரிக்க அதிபர் ஒபாமாவிற்கு கடும் நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. இனி அவர் முன்வைக்கும் திட்டங்கள் குறித்து முடிவுகள் எடுப்பது கடினமான ஒன்றாக மாறிவிடும்.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த தேர்தலில், பல்வேறு இடங்களில் போட்டியிட்ட இந்திய அமெரிக்கர்கள் வெற்றி வாகை சூடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.