Home நாடு கேமரன் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு!

கேமரன் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு!

604
0
SHARE
Ad

image4

கேமரன் மலை, நவம்பர் 6 – கேமரன் மலையில் நேற்று இரவு ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கில் பலியானவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

கோலா தெர்லா அருகே வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 13 வயது ஆர். துணேஷ் என்ற சிறுவனின் உடல் அங்கிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கேமரன் மலை ஓசிபிடி துணைத் தலைவர் முகமட் சஹாரி வான் புசு தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இது தவிர, அனிபன் (வயது 48) என்ற இந்தோனேசியரும், முகமட் யூசோப் மியா (வயது 66) என்ற நேபாள நாட்டைச் சேர்ந்தவரும் தங்களது வீடுகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் மண்ணில் புதையுண்டு பலியாகியுள்ளனர்.