Home இந்தியா சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதை நூல் மும்பையில் வெளியீடு!

சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதை நூல் மும்பையில் வெளியீடு!

596
0
SHARE
Ad

tendulkerமும்பை, நவம்பர் 6 – கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் சுயசரிதை நூல் மும்பையில் வெளியிடப்பட்டது. ‘என் வழியில் விளையாடுகிறேன்’ என்ற பெயரில் சச்சின் சுயசரிதை எழுதியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, ராகுல் திராவிட் ஆகியோர் விழாவில் பங்கேற்றார். தன் சுயசரிதையின் முதல் பிரதியை தனது தாயிடம் டெண்டுல்கர் வழங்கினார்.

நூலின் பிரதியைப் பெற்றதும் தனது தாயின் முகத்தில் தோன்றிய பெருமிதம் மதிப்பற்றது என சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.